மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக முன்னிலை: பனையூர் அலுவலகத்தில் தொண்ட ர்கள் உற்சாகம்!…

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது.

தாராபுரத்தில், அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், தவெக அதிமுகவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனால், மதுராந்தகம், தாராபுரத்தில் 9வது சுற்றிலும் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இதன்எதிரொலியால், பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பட்டாசுகள் வெடித்தும், குத்தாட்டம் போட்டும் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், பனையூர் தவெக அலுவலகம் களைகட்டி உள்ளது.

இதற்கிடையே, தவெக அலுவலகத்திற்கு நடிகர் மன்சூர் அலிகான் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *