சென்னை:
அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன.
இதையடுத்து, 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டம் தற்போது மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த மாதத்துக்கான கூட்டம் வரும் 5-ம் தேதி மாலை 3 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அம்சங்களை தீர்மானங்களாக நிறை வேற்றிக் கொள்ள வேண்டும்.
இதுதவிர, திறன் இயக்கம், எண்ணும் எழுத்தும், உயர்கல்வி வழிகாட்டி திட்டம், இடைநின்றவர்களைப் பள்ளிகளில் சேர்த்தல், மகிழ் முற்றம், ஆட்டிசம் குழந்தைகளைக் கண்டறிதல், மணற்கேணி செயலி பயன்பாடு, இல்லம் தேடி கல்வி, கலைத் திருவிழா, மாணவர்களின் ஆதார் புதுப்பிதல் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என aஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.