தமிழகத்தில் மின்விபத்​துகளில் சிக்கி உயிரிழப்​போரின் குடும்​பத்​துக்கு ஒரே நாளில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் – பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்!!

சென்னை:
தமிழகத்தில் மின்விபத்​துகளில் சிக்கி உயிரிழப்​போரின் குடும்​பத்​துக்கு ஒரே நாளில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று மின்வாரிய தலை​மைப் பொறி​யாளர்களுக்கு மின் வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

தமிழ்​நாடு மின்வாரியம் நுகர்​வோர்க்கு மின்​சா​ரத்தை விநி​யோகம் செய்து வரு​கிறது. அனைத்து நுகர்​வோருக்​கும் முறை​யாக மின்​சா​ரம் கொண்டு சேர்க்​கும் வகை​யில், சென்​னை​யில் நிலத்​துக்கு அடி​யில் புதைவடங்​களாக​வும், மற்ற இடங்​களில் மின் கம்​பங்​கள் வாயி​லாக​வும் மின் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

இதனிடையே, மழைக்​காலங்​களில் மின் கம்​பிகள் அறுந்து விழுந்​தும், நிலத்​துக்கு அடி​யில் உள்ள கேபிள்​களில் இருந்து மின்கசிவு ஏற்​பட்​டும் சில நேரங்களில் பாதிப்​பு​கள் நேரிடு​கின்​றன. இதன் மூலம் சில நேரங்​களில் உயி​ரிழப்​பு​களும் ஏற்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், மின் விபத்து காரண​மாக உயி​ரிழப்​போரின் குடும்​பத்​துக்​கு, ரூ.10 லட்​சம், இரு கைகள், கால்​கள், கண்​களை இழந்​தால் ரூ.3 லட்சம், ஒரு கை, கால், கண்ணை இழந்​தால் ரூ.1.50 என லட்​சம் இழப்​பீட்டுத் தொகை வழங்​கப்​படு​கிறது.

இந்த இழப்பீடு​களை, மண்டல தலை​மைப் பொறி​யாளரே வழங்​கலாம். இருப்​பினும், இழப்பீடு வழங்​கு​வ​தில் காலதாமதம் ஏற்​படு​வ​தாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து தெடர்ந்து புகார்​கள் வந்தன.

இந்த விவ​காரம் தொடர்​பாக, அண்​மை​யில் மின் வாரிய உயர​தி​காரி​கள் ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது, மின் விபத்து காரண​மாக உயி​ரிழந்​தார் என்​பதை உறுதி செய்​ததும், விதி​முறை​களைப் பின்​பற்​றி, பாதிக்​கப்​பட்​ட​வரின் குடும்​பத்​துக்கு ஒரே நாளில் இழப்பீடு வழங்​குமாறும், அதி​கபட்​சம் 48 மணி நேரத்​துக்​குள் இழப்​பீட்டு வழங்​கு​மாறும் தலை​மைப் பொறி​யாளர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ள​தாக மின்வாரிய அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *