மேஷம்
எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும் நாள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றும்.
மிதுனம்
தட்டுப்பாடு அகலும் நாள். பாகப்பிரிவினை பற்றிச் சிந்திப்பீர்கள். அலைபேசி வாயிலாக அனுகூலச் செய்தி வந்து சேரும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
கடகம்
தொட்டது துலங்கும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
சிம்மம்
நண்பர்களின் ஆதரவால் நலம் கிடைக்கும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.
கன்னி
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உடன் பிறப்புகள் உங்கள் கருத்துக்கு ஒத்து வருவர். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.
துலாம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் சலுகை உண்டு.
விருச்சிகம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. தீட்டிய திட்டம் வெற்றி பெறும்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். குடும்பச்சுமை கூடும். எப்படியும் முடியும் என்று நினைத்த காரியம் முடிவடையாமல் போகலாம்.
மகரம்
தன்னம்பிக்கையோடு பணிபுரியும் நாள். குடும்பத்தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பிரபலமானவர்களின் சந்திப்புக் கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
கும்பம்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். கரைந்த சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியாக அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.
மீனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களின்போது பொருட்களில் கவனம் தேவை. உடல் ரீதியாக உபாதைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.