சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் ஜன.16 முதல் 18-ம் தேதி வரை பன்னாட்டு புத்தகக் காட்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!!

சென்னை:
பன்​னாட்டு புத்தகக் காட்சி-2026 ஜன.16 முதல் 18-ம் தேதி வரை சென்​னை​ கலைவாணர் அரங்கில் நடக்​க​வுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் அன்பில் மகேஸ் அறி​வித்​தார்.

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் பன்​னாட்டு புத்தகக் காட்சி சென்​னை​யில் 2023-ம் ஆண்டு முதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

தொடர்ந்து 4-வது ஆண்​டாக பன்​னாட்டு புத்தகக் காட்சி-2026 சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் ஜன.16 முதல் 18-ம் தேதி வரை நடத்​தப்பட உள்ளது. இதற்​கான இலச்​சினையை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் நேற்று வெளி​யிட்​டார்.

இந்​நிகழ்​வில் பள்​ளிக் கல்​வித் துறை செயலர் பி.சந்​தரமோகன், இயக்​குநர் ச.கண்​ணப்​பன், பொது நூல​கத் துறை இயக்​குநர் ச.ஜெயந்​தி, தொடக்கக் கல்வி இயக்​குநர் பூ.ஆ. நரேஷ் உட்பட பலர் கலந்​து​கொண்டனர்.

தொடர்ந்து அமைச்​சர் மகேஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நடப்​பாண்டு பன்​னாட்​டுப் புத்​தகத் திரு​விழாவுக்​கான இலச்​சினை ‘உல​கைத் தமிழுக்​கும், தமிழை உலகுக்​கும்’ என்ற கொள்​கையை மைய​மாக கொண்டு வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இது தமிழகத்​தின் சர்​வ​தேச இலக்​கிய பரி​மாற்​றத்​தில் ஒரு புதிய அத்​தி​யா​யத்தை உரு​வாக்​கும்.

உலகின் 100 நாடு​களின் பங்​கேற்பு மற்​றும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட மொழிகளில் தமிழ் எழுத்​தாளர்​களின் படைப்​பு​கள் மொழிபெயர்க்​கப்​படு​தல் போன்ற இலக்​கு​களை எட்​டும் முயற்​சி​யாக இந்​தக் கண்​காட்சி அமை​கிறது.

திறந்த தளமாக மாற்றம்: 2023-ல் பன்​னாட்டு புத்தகக் காட்சி 24 நாடு​களைக் கொண்டு தொடங்​கப்​பட்​டது.

இந்த முயற்​சி, 2025-ல் 64 நாடு​களாக விரிவடைந்​தது. தொடர்ந்து நடப்​பாண்டு முதல் பொது மக்​கள் பங்​கேற்​கும் திறந்த தளமாக மாற்​றப்​படு​கிறது.

இதன்​மூலம் தமிழக பதிப்​பாளர்​கள் உலக வாசகர்​களை நேரடி​யாகச் சந்​திக்​கும் வரலாற்​றுச் சந்​தர்ப்​பம் உரு​வாகிறது.

இதற்​கிடையே 3 ஆண்​டு​களில் 110 தமிழ் எழுத்​தாளர்​களின் 185 நூல்​கள், 26 மொழிகளுக்கு மொழிபெயர்க்​கப்​பட்​டுள்​ளன.

தமிழ் இலக்​கி​யத்தை சர்​வ​தேச அரங்​கில் நிலைப்​படுத்​து​வதே இந்த கண்​காட்​சி​யின் நோக்​க​மாகும்.

வரும் ஆண்​டு​களில் அதி​கள​வில் நாடு​கள் பங்​கேற்​கும்​போது தமிழகத்​தின் 2-ம் நிலை நகரங்​களில் கண்​காட்​சியை நடத்​த​வும் ஆலோ​சிப்​போம்.

நடப்​பாண்​டில் 120-க்​கும் மேற்​பட்ட புத்​தகங்​கள் இந்த கண்​காட்​சி​யில் வெளி​யிடப்பட உள்​ளன. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *