அதிமுக – பாஜகவுக்கு போட்ட பிச்சையால் 4 எம்எல்ஏக்கள் !! துரோகியை விலைக்கி வாங்கி விடலாம் இந்த அண்ணா திமுக தொண்டனை விலைக்கு வாங்க முடியாது – சி.வி.சண்முகம்!!

அண்ணா திமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கம் தொண்டனை தேடி வாய்ப்பளிக்கும் இயக்கம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி இந்த இயக்கத்தை முடக்கி விடலாம் துரோகிகளை வைத்து சின்னத்தை முடக்கி விடலாம் என நினைத்து வருகின்றனர்.

ஆனால் முடியவில்லை என்னவென்றால் துரோகியை விலைக்கி வாங்கி விடலாம் இந்த அண்ணா திமுக தொண்டனை விலைக்கு வாங்க முடியாது என்றார்.

அதிமுகவை ஒடுக்கிடலாம் என்று கருணாநிதியே பார்த்தார் ஆனால் ஒரு பப்பு கூட வேகல .மு க ஸ்டாலினை உங்க அப்பா கால் தூசிக்கு வர முடியாது நீ நீ எழுதிக் கொடுத்ததே சரியாக படிக்க முடியல என்றார்.

மேலும் பேசிய அவர் அமைச்சர் பொன்முடி பற்றி பேசிய அவர், அமைச்சர் பொன்முடி மற்றொரு வழக்கில் தேர்தல் முடிவுகள் உள்ள இருப்பாரா வெளியே இருப்பாரா என்று கூட அவருக்கு தெரியாது. அதிமுக ஒரு கட்சி இருக்கான்னு கேட்கிறார் என்றார்.

இப்பதான் பதவியேற்று ஒரு நாள் கூட ஆகல வாயை வச்சுக்கிட்டு சும்மாவே இருக்கறது இல்ல என பொன்முடியை விமர்சனம் செய்தார். பொன்முடிக்கு வாய்தா எதிரி ஏதோ கஷ்டப்பட்டு ஜெயிலுக்கு போற நேரத்துல ஏதோ நீதிபதி உத்தரவால் தப்பித்து மீண்டும் அமைச்சராகி 48 மணி நேரம் கூட ஆகல.

தேர்தல் விதிமுறை என்பது 100 மீட்டருக்கு முன்பு யாராக இருந்தாலும் வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் ஐந்து பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் இவர் கட்சிக் கொடியை காரில் வேட்பாளருடைய சின்னத்தை வைத்து காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று உள்ளார்.

தேர்தல் அதிகாரி வேடிக்கை பார்க்கிறார்கள் காவல் துறையும் வேடிக்கை பார்க்கிறார்கள். இது அமைச்சர் பொன்முடிக்கு அதிகார திமிரு ஆணவம் ஜெயிலுக்கு போற ஆளு தப்பி இன்னும் அதிகாரத்தில் இது போன்ற செயலில் ஈடுபடுகிறார் பொன்முடி என்றார்.

மேலும் இந்த காவல்துறையும் தேர்தல் அதிகாரியும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது மேலும் நாங்கள் வருகின்ற ஐந்தாம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு இருந்தோம் ஆனால் இதுவரை இந்த காவல்துறை அனுமதி தரவில்லை இந்த டிஎஸ்பி சொல்லிவிட்டார்கள் என்று சொல்லுகிறார்கள் அவர் என்ன தேர்தல் அதிகாரியா என்று வினா எழுப்பினார்.

இந்த டிஎஸ்பியும் மாற்றக்கோரி நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு முறையிட்டு இருக்கோம் என்றார் இதனால் நாம் கழகத் தொண்டர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றார்.

திமுக மந்திரிகள் பேசுவது இன்னிக்கு நீதிபதி யார் நாளைக்கு யார் நீதிபதி இப்படி ஒவ்வொரு மந்திரியும் ஒருவருக்கொருவர் பேசுவது மட்டுமே அவர்கள் வேலையாக உள்ளன மேலும் உதயநிதி என்பவர் நான் சானாதத்தை ஒழிப்பேன் என பேசினார்.

நான் யாருக்கும் அச்சப்பட மாட்டேன் என்றார் ஒன்னும் கிழிக்க முடியாது அவர் பெயரிலும் கேஸ் இருக்குது பீகார் கர்நாடகா உத்திர பிரதேசம் போன்ற இடங்களில் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் உதயநிதி வழக்கு நடக்கும் அது நிச்சயம் அவரு அங்க போயிடுவாரு போயிடுவாரு போயிடுவாரு தீர்ப்பு நம்ம சொல்லக்கூடாது அது நீதிமன்றம் தான் சொல்லுவாங்க என்றார்.

உதயநிதி ஸ்டாலின் ஒரு பக்கம் செங்கல் வச்சிட்டு எடப்பாடியை பல்லக்கட்டுறாருன்னு கிண்டலா பேசுவாரா அப்ப பேச முடியுமா அவரால என கேள்வி எழுப்பினர்.

பஞ்ச் டயலாக் எல்லாம் பேசின உதயநிதி வாய் வாயாலே வலந்த கட்சி அழிய போகுது என்றார். திமுக அணையற விளக்கு பிரகாசமா எரியுது திமுக நிலைமை அதான் முடிந்து போன கதை என்றார் யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது.

திமுகவும் பாஜகவும் ஒட்டி உறவாடினர் ஆறு ஆண்டுகளாக 2ஜி வழக்கில் ஆறு ஆண்டுகளாக வழக்கு எடுக்கலாமா வேண்டாமான்னு கிடப்பில் போட்டவர்கள் எப்படியோ இப்ப ஏத்துக்கிட்டாங்க அந்த அளவுக்கு நெருக்கமா திமுகவும் கனிமொழியும் இருந்தாங்க என்றார்.

கனிமொழி பாராளுமன்றத்தில் நிலை குழு தலைவர் டி ஆர் பாலு பாராளுமன்றத்தில் நிலை குழு தலைவர் திருச்சி சிவா பாராளுமன்றத்தில் ஒரு நிலைக்குழு தலைவர் அக எதிரி என்று சொல்லிக்கொண்டு பாஜக கட்சியுடன் உறவாடிக் கொண்டிருக்கிறது நல்லா தெரிஞ்சுக்கோங்க மக்களே திமுகவுக்கு போடுகின்ற வாக்கு பாஜகவுக்கு போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு போடுகின்ற ஓட்டு என்றார்.

இதான் உண்மை திமுகவுக்கு போகின்ற ஓட்டு பிஜேபிக்கு போடுகின்ற ஓட்டு என்றார். மக்களைப் பற்றி சிந்திக்காத அரசு பாஜக மக்களிடையே மத வாதத்தைத் தூண்டி வருகிறது.

பா ஜ க ஆகவே நாடு என்று ஓர் அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று வருகிறது மீண்டும் மோடி மீண்டும் மோடி என்கின்றார் நாங்கள் என்ன சொல்கிறோம் வேண்டாம் மோடி வேண்டாம் மோடி போதும்டா சாமி போதுண்டா சாமி , நீ ஆண்ட பத்தாண்டு போதும்டா சாமி நீ போய் தொலை சாமி அந்த அளவிற்கு மக்கள் கஷ்டப்பட்டது எல்லாம் போதும் என்றார்.

இன்னொரு முறை பாஜக மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஜனநாயகத்து ஒரு மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர வேண்டும் பாஜகவுக்கு எதிராக இருந்தால் உன் மீது இடி, சிஐடி இதுதான் பிஜேபி உடைய கூட்டணி கட்சிகள்.

அமலாக்கத்துறை மத்திய புலனாய்வுத்துறை வருமானவரித்துறை என்று பேசினார் மேலும் பேசிய அவர் பிஜேபியில் இருப்பவர்களெல்லாம் உத்தம காந்தியா ஆட்சிக்கு வரவில்லை பிஜேபி நாங்கள் போட்ட நாலு எம்எல்ஏ சீட் பிச்சையால் ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

பாஜகவினர் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பைசா கூட நிதி தர மாட்டார் மத்திய அரசு மழை வெள்ளத்தால் மக்களை சந்திக்க மோடி ஆனால் இப்பொழுது தேர்தல் நேரம் என்பதால் தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் மோடி மேலும் தமிழகத்தில் மது கஞ்சாஅதிகரித்து உள்ளது மேலும் சாராயம் நாளை ஒருபுறம் பாட்டிலில் குடிதண்ணீர் விற்பனை செய்வது மறுபுறம் தமிழ்நாட்டை கஞ்சா மது போன்றதால் நாசம் செய்து மாணவர்களை சீரழித்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் முக்கிய கடத்தல் மன்னனாக திமுகவை சேர்ந்த நிர்வாகிஒருவர் உள்ளார் அவர்தான் தற்பொழுதும் பல கோடி கஞ்சா போன்ற போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வருகிறார் அதிமுகவினர் அயராத பாடுபட்டு பாக்யராஜை அதிக வாக்கு வித்தியாசத்தில் விழுப்புரம் பகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *