சென்னை:
ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி.நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மக்கள் பிரதமரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதற்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரின் வருகை 2026 பாஜகவின் வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும்.
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், ஜல்லிக்கட்டை ‘காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு’ என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.
பாஜக அரசுதான் தடையை நீக்கி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது. ஆனால், தற்போது அதைத் திமுகவின் விழாவாக மாற்றிவிட்டனர். இது கண்டிக்கத்தக்கது.
திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாத சூழல் நிலவுகிறது. 2026 தேர்தலில் திமுக கூட்டணி ஒன்றாக நீடிக்குமா என்று சொல்லமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.