நியூஸிலாந்​துக்கு எதி​ரான 3-வது ஆட்டத்தில் அபிஷேக் அதிரடி!!

குவாஹாட்டி:
நியூஸிலாந்​துக்கு எதி​ரான 3-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 8 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. மேலும், டி20 கிரிக்​கெட் தொடரை இந்​திய அணி 3-0 என்ற கணக்​கில் கைப்​பற்​றியது.

நியூஸிலாந்து அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டிகள், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. ஒரு​நாள் தொடரை நியூஸிலாந்து 2-1 என்ற கணக்​கில் வென்​றது.

இதைத் தொடர்ந்து நாக்​பூரில் நடை​பெற்ற முதல் டி20 போட்​டி​யில் 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும், ராய்ப்​பூரில் நடை​பெற்ற 2-வது டி20 போட்​டி​யில் 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது.

இந்​நிலை​யில், நேற்று குவாஹாட்​டி​யில் நடை​பெற்ற 3-வது போட்​டி​யில் முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 153 ரன்​கள் எடுத்​தது.

டேவன் கான்வே 1, டிம் செய்​பர்ட் 12, ரச்​சின் ரவீந்​திரா 4, கிளென் பிலிப்ஸ் 48, மார்க் சாப்​மேன் 32, டேரில் மிட்​செல் 14, மிட்​செல் சான்ட்​னர் 27, கைல் ஜேமிசன் 3, மேட் ஹென்ரி 1, இஷ் சோதி 2, ஜேக்​கப் டஃப்பி 4 ரன்​கள் எடுத்​தனர்.

இந்​திய அணி தரப்​பில் பும்ரா 3, ஹர்​திக், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2, ஹர்​ஷித் ராணா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர்.

பின்​னர் விளை​யாடிய இந்​திய அணி 10 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 155 ரன்​கள் எடுத்து வெற்றி கண்​டது.

சஞ்சு சாம்​சன் 0, இஷான் கிஷன் 28 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். அதிரடி​யாக விளை​யாடிய அபிஷேக் சர்மா 20 பந்​துகளில் 68 ரன்​களும், கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 26 பந்​துகளில் 57 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

இதையடுத்து இந்​திய அணி 8 விக்​கெட் வித்​தியாசத்​தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்​ற கணக்​கில்​ கைப்​பற்​றியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *