ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6126 ஆக அதிகரிப்பு!!

டெஹ்ரான்:
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.


பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது. இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *