எனக்குப் படம் பிடித்திருந்தது, ஆனால் இது அப்பாவின் மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் இல்லை!! மனம் திறந்து ஓபனாக பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்…..

சென்னை:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “கூலி”. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்தது.

எனினும், கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் கூலி இரண்டாவது இடம் பிடித்தது.

இந்த நிலையில் கூலி படம் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளரும், நடிகர் ரஜினியின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மனம்திறந்து பதிலளித்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “வித் லவ்” திரைப்படம் நாளை (பிப். 6) வெளியாக இருக்கிறது.

இதையொட்டி தனியார் செய்தியாளருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் “கூலி” படம் பற்றி பேசியுள்ளார்.

உங்களுக்கு கூலி படம் பிடித்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த், “படத்தின் கடைசி 10 நிமிடங்கள் அதாவது ‘டி-ஏஜிங்’ பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் தலைவர் ரஜினிகாந்தின் ரசிகன் என்ற முறையில், அவரை இன்னும் அதிகமாக பார்க்க விரும்பினேன்.

எனக்குப் படம் பிடித்திருந்தது, ஆனால் இது அப்பாவின் மிகவும் பிடித்த படங்களின் பட்டியலில் இல்லை.”

“என் கருத்துப்படி, இப்போதெல்லாம் மக்கள் அதிகப்படியான வன்முறையை விரும்புவதில்லை என நினைக்கிறேன்.

‘கூலி’ படம் பற்றி நான் மேலும் விரிவாக பேச விரும்பவில்லை, ஏனென்றால் பல நல்ல படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு,” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *