சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய சென்னை பக்தர்!!

கடலூர் ;
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார்.

கோவிலில் உள்ள அவரது கட்டளை தீட்சிதரான ராமலிங்க தீட்சிதர் மூலம் காணிக்கையாக நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினார்.


இந்த காசு மாலை நேற்று காலை பூஜையின் போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *