கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா!!

கடையம்:

கீழக்கடையம் 18 பட்டி நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கால்நாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் தினமும் காலை, மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்று வருகிறது.

விழாவில் கடந்த 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் வடக்கு உடையார் பிள்ளையார் கோவில் இருந்து 18 பட்டி தீர்த்தம் மேளதாளம், வானவேடிக்கையுடன் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு தேர் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்ஞகிழமை) இரவு மண்டப சிலைக்கு கண்திறப்பு, தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று காலையில் 18 பட்டிகளுக்கு அம்மன் ஊர் விளையாடல், சப்பர ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் இன்று காலையில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சப்பர ஊர்வலம், மதியம் அல தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மதிய கொடை சிறப்பு வழிபாடு, அம்மன் ஊர்விளையாடல் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு அல தீர்த்தம் கொண்டு வரப்பட்டு நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் சாம கொடை, படைப்பு தீபாரதனை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வருதல், அதிகாலை 4 மணிக்கு பத்திரகாளியம்மன், முப்புடாதியம்மன் தேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் மூலஸ்தான பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று படைப்பு தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து அன்னதானம் நடக்கிறது. 12-ந்தேதி முதல் 16 -ந்தேதி வரை இரவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 8-ம் பொங்கல் நிகழ்ச்சி, காப்பு களைந்து அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா நடத்தும் 7-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள், கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *