ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சர்ச்சையை உருவாக்கும் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு!

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் பாகிஸ்தான் அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான உஸ்மான் தாரிக்​கின் பந்​து​வீச்சு பாணி உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்​துள்​ளதுடன் சர்ச்​சைக்​கும் வழி​வகுத்​துள்​ளது. கொழும்​பில் கடந்த 10-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதி​ரான லீக் ஆட்​டத்​தில் உஸ்​மான் தாரிக் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

இந்த ஆட்​டத்​தில் அவரது பந்​து​வீச்சு பாணி விதிமுறைகளுக்கு அப்​பாற்​பட்டு இருப்​ப​தாக பல்​வேறு கருத்​துகள் எழுந்​துள்​ளன. உஸ்​மான் தாரிக் ஓடிவந்து அதன் பின்​னர் கிரீஸில் இடை நிறுத்​தம் செய்​தபடி பந்து வீசுகிறார். இது பார்ப்​ப​தற்கு பேட்​ஸ்​மேனை நோக்கி பந்தை எறிவது போன்று இருக்​கிறது. இதனால் இது விதிகளின்​படி ஏற்​றுக்​கொள்​ளத்​தக்​கதா என்று பல்​வேறு தரப்​பினர் கேள்வி​களை எழுப்பி வரு​கின்​றனர்.

இது ஒரு​புறம் இருக்க உஸ்​மான் தாரிக்​கின் பந்​து​வீச்சு முறை சரியா இல்​லையா என்​பதை ஐசிசி பந்​து​வீச்சு சோதனை மையத்​தில் மட்​டுமே சோதிக்க முடி​யும் என்று கூறப்​படு​கிறது. அடுத்து முக்​கிய​மாக 15 டிகிரி விதி உள்ளது. இதன்​படி, பந்​து​வீச்​சாளர் தனது முழங்​கையை 15 டிகிரி வரை நேராக்​கலாம். மேலும், பந்​து​வீச்​சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்​லையா என்​பதை மைதானத்​தில் இருக்​கும் நடு​வர் தீர்​மானிப்​பது சாத்தியமற்​றது.

அதிரடி வீரர்​களான ஆஸ்​திரேலி​யா​வின் கேமரூன் கிரீன், தென்​னாப்​பிரிக்​கா​வின் டெவால்ட் பிரெ​விஸ் ஆகியோர் உஸ்​மான் தாரிக்​கின் பந்​து​வீச்சு பாணி​யில் சமீபத்​தில் ஆட்​ட​மிழந்து இருந்​தனர். கடந்த ஆண்டு நவம்​பரில் நடைபெற்ற சர்​வ​தேச டி 20 போட்​டி​யில் டெவால்ட் பிரேவிஸ், உஸ்​மான் தாரிக் வீசிய 2-வது பந்​திலேயே விக்கெட்டை பறி​கொடுத்​திருந்​தார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்​ன​தாக லாகூரில் நடை​பெற்ற இருதரப்பு தொடரில் ஆஸ்​திரேலி​யாவை பாகிஸ்​தான் 3-0 என்ற கணக்​கில் வீழ்த்​தி​ய​போது, வைடு பந்தை நேரடி​யாக கவர் ஃபீல்​டரிடம் அடித்து கேமரூன் கிரீன் ஆட்​ட​மிழந்​தார். அப்​போது கேமரூன் கிரீன் எல்​லைக் கோட்​டுக்கு அரு​கில் தாரிக்​கின் பந்​து​வீச்சு நடவடிக்கையை கேலி செய்​தார்.

இது ஒரு​புறம் இருக்க டி 20 கிரிக்​கெட்​டில் தாரிக்​கின் எழுச்சி நம்ப முடி​யாத​தாக​வும் உள்​ளது. கடந்த ஆண்டு நவம்​பரில் நடை​பெற்ற முத்​தரப்பு டி 20 தொடரின் போது ஜிம்​பாப்​வேக்கு எதி​ராக ஹாட்​ரிக் விக்​கெட் வீழ்த்தியிருந்தார். சர்​வ​தேச டி20 போட்​டிகளில் 4 ஆட்டங்களில் விளையாடி 88 பந்​துகளை வீசி​யுள்ள அவர், 11 விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யுள்​ளார். ஓவருக்கு சராசரியாக 5.93 ரன்​களை மட்​டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

பாகிஸ்​தான் சூப்​பர் லீக்​கின் போது சந்​தேகத்​திற்​கிட​மான பந்​து​வீச்சு நடவடிக்​கைக்​காக அவர் மீது இரண்டு முறை புகார் அளிக்​கப்​பட்​டது, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் லாகூரில் உள்ள தேசிய கிரிக்​கெட் அகாட​மி​யில் சோதனைக்​குப் பிறகு அவர், பந்​து​வீச அனுமதிக்கப்பட்டார்.

உஸ்​மான் தாரிக் கரீபியன் பிரீமியர் லீக்​கிலும் இடம்பெற்று கவனம் ஈர்த்தார். பந்து வீசுவதற்கு முன் நீண்ட நிறுத்​தம் செய்​யும் உஸ்​மான் தாரிக், பந்தை காற்றில் மெது​வாக தூக்கி வீசு​வார். இது வழக்​க​மான பந்துகளை​விட பேட்​ஸ்​மேன்​களை வந்​தடைய சிறிது நேரம் எடுப்பதை போன்ற தோற்றதை உரு​வாக்​கும்.

வேகம் குறைந்த இது​போன்ற பந்​துகளை பேட்​ஸ்​மேன்​கள் கவன​மாக கையாள வேண்​டும். ஏனென்​றால் கவனக்​குறைவுடன் பந்​துகளை விளாச முயன்​றால் பந்​துகள் எல்லைக் கோட்​டுக்கு செல்​வதை​ விட ஆடுகளத்துக்குள்ளேயே உயர​மாக சென்று கேட்ச் செய்யப்​படு​வதற்கான வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ளது.

பாகிஸ்​தான் அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான சர்​ப​ராஸ் அகமது கூறும்​போது, “உஸ்​மான் தாரிக்​கின் பந்​து​வீச்​சில் க்ரீஸில் காலடி எடுத்து வைக்​கும் தருணத்​தில் நீண்ட இடைநிறுத்​தம் ஏற்​படு​வ​தால், பேட்​ஸ்​மேன்​கள் அவரது பந்து​வீச்சை புரிந்​து​கொள்ள சிரமப்​படு​கிறார்​கள்.

நீண்ட இடைநிறுத்​தம் பேட்​ஸ்​மேன்​ களின் கவனத்தை சிதைக்​கிறது. உஸ்​மான் தாரிக் வேக​மாக பந்து வீசும்​போது, வேகத்தை குறைத்து வீசும் போதும் பந்து எந்த வகை​யில் வரு​கிறது என்​ப​தில் தெளி​வில்​லாமல் பேட்​ஸ்​மேன்​கள் பந்​துகளை தவற​விடு​கின்​றனர்” என்​றார்.

வழக்​கத்​துக்கு மாறான உஸ்​மான் தாரிக்​கின் பந்​து​வீச்சு பாணி பாகிஸ்​தானின் ரகசிய ஆயுத​மாக​வும், கிரிக்கெட்டின் பரபரப்​பான விவாத​மாக​வும் உள்​ளது. டி 20 உலகக் கோப்பை தொடரில் நாளை (15-ம் தேதி) இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள்​ பலப்​பரீட்​சை நடத்​த உள்​ளன. இந்த ஆட்​டம்​ கொழும்​பு நகரில்​ உள்​ள பிரேம​தா​சா மைதானத்​தில்​ நடை​ பெறுகிறது. இந்​த ஆடு​களம்​ முற்றிலும்​ சுழலுக்​கு ​சாதக​மாக அமைந்​துள்​ளது. இத​னால்​ உஸ்​​மான்​ ​தாரிக்​கின் பந்​து வீச்​சு முக்​கிய பங்கு வகிக்கக்கூடும்​ என கூறப்​படு​கிறது.

‘தா​ரிக் நின்​றால் வில​கி​விடுங்​கள்’

இந்​திய அணி​யின் முன்​னாள் சுழற்​பந்து வீச்​சாள​ரான ரவிச்​சந்​திரன் அஸ்​வின் தனது யூடியூப் சானலில் ‘அஸ்​வின் குரல்’ நிகழ்ச்​சி​யில் கூறும்​போது, “உஸ்​மான் தாரிக் பந்தை வீசுவதற்கு முன்பு நிறுத்​தம் செய்து வீசி​னால் பேட்​ஸ்​மேன் ஸ்டெம்பை விட்டு வில​கிச் செல்ல உரிமை உண்​டு. பந்​து​வீச்​சாளர் நின்​று​விட்​ டார் என நினைத்​தேன்’ என்று பேட்​ஸ்​மேன் கூறி​விடலாம்.

அது ஒரு சுவாரஸ்​ய​மான விஷய​மாக​வும், நடு​வருக்கு மிகப்​பெரிய தலை​வலி​யாக​வும் இருக்​கும். நான் களத்​தில் இருந்​திருந்​தால் அதைச் செய்​திருப்​பேன். வி​தி​களுக்கு உட்பட்டு ஆட்​டத்தை வெல்ல எல்​லா​வற்​றையும் செய்ய வேண்​டும். அவர் எப்​போது பந்தை விடு​விப்​பார் என்று எனக்​குத்​ தெரி​யாது, நான்​ வில​கிச்​ செல்​வேன்​ என்​று நான்​ சொல்​வேன்​. நான்​ வில​கிச்​ சென்​றால்​, அது நடுவரின்​ பொறுப்​பு” என்றார்.

‘விளாச வேண்டிய நேரம்’

உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு தொடர்பாக இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் கூறும்போது, “நாங்கள் ஏற்கனவே பயிற்சியை முடித்துவிட்டோம். இப்போது பந்தைப் பார்த்து எங்கள் இயல்பான விளையாட்டை விளையாட வேண்டிய நேரம் இது.

பந்துவீச்சாளரின் வீடியோவை பார்த்தாலே எந்த மாதிரியான பந்துவீச்சு நடக்கப் போகிறது என்பது பற்றிய ஒரு யோசனை கிடைக்கும். எனவே இந்த விஷயத்தை நாங்கள் எளிமையாக வைத்திருக்கிறோம். நமீபியா அணியின் ஜெரார்டு எராஸ்மஸ் பந்து வீச்சில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது”என்றார்.
..

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *