சென்னை
அஜித் உடனான படம் எப்போது தொடங்கும் என்பதற்கு இயக்குநர் சிவா பதிலளித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித்.

இப்படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு சிவா, “அனைத்தும் சரியாக அமையும் போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அந்தப் படம் எந்த ஜானர் என்பதை மட்டும் இப்போது ரகசியமாக வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.
’வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என 4 படங்களில் அஜித் – சிவா கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது.
மீண்டும் இணையும் இக்கூட்டணியின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் படம் தொடங்கியவுடன் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா கடைசியாக இயக்கிய ‘கங்குவா’ படத்தின் படுதோல்வியால், கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால் அஜித்துடனான படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.