ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் இணைகிறது ‘இருமுகன்’ கூட்டணி!!

சென்னை:
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க புதிய படமொன்று உருவாக இருக்கிறது.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத் தியுள்ளார் விக்ரம்.

இதில் முதல் படமாக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் படமொன்று நடிக்கவுள்ளார். விக்ரம் – ஆனந்த் ஷங்கர் கூட்டணி இணைந்து ‘இருமுகன்’ படத்தில் பணிபுரிந்துள்ளது.

அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய படத்திலும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறது.

விக்ரம் – ஆனந்த் ஷங்கர் இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இன்னும் முடிவாகவில்லை. ஆனால், இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்புக்கு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *