அரசியலை தாண்டி ஸ்டாலின் ஐயா மேல் மதிப்பும், மரியாதையும் இருக்கு !! இதுவரை ஒரு இடத்தில் கூட முகம் சுளிக்கிற மாதிரியோ, யாரையாவது கடிந்தோ நான் பார்த்ததில்லை – விஜய் ஆண்டனி!!

சென்னை;
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.


கொரட்டூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்தரங்க விழாவில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, “அரசியலை தாண்டி ஸ்டாலின் ஐயா மேல் மதிப்பும், மரியாதையும் இருக்கு. இதுவரை ஒரு இடத்தில் கூட முகம் சுளிக்கிற மாதிரியோ, யாரையாவது கடிந்தோ நான் பார்த்ததில்லை.

பண்பாகவும், அன்பாகவும் நடந்து கொள்வார். மனிதநேயம் மிக்கவர்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *