ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்திருப்பது திமுகவுக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது!! திருமாவளவன் வரவேற்பு….

சென்னை:
ஓபிஎஸ் பாஜகவில் சேராமல் திராவிட பாசறைக்கு வந்திருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்திருப்பது திமுகவுக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது என விசிக பொதுச்செயலாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப், 27) திமுகவில் இணைந்துள்ளார். அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, திமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் ஓபிஎஸ்ஸை வரவேற்று வருகின்றனர். அதேவேளையில், அதிமுக தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வரும் 2-ஆம் தேதி திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். ஓபிஎஸ் பாஜகவில் சேராமல் திராவிட பாசறைக்கு வந்திருக்கிறார்.

ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்திருப்பது திமுகவுக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறது. திமுகவில் இணைந்துள்ள ஒபிஎஸ்-ஐ வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *