திரு.வி.க. நகர் மண்டலம், கபிலர் தெருவில் 7.64 கோடி ரூபாய் செலவில் சென்னை நடுநிலைப் பள்ளிக்காக கட்டப்பட்டு உள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை:
சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் மாடிப்படி கூரைத் தளங்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்நூலகத்தின் தரைத்தளத்தில் வரவேற்பறை, குழந்தைகளுக்கான பிரத்தியேக நூலகக் கூடம், நூலகர் அறை, நாளிதழ் வாசிப்பு அறை, காத்திருப்போர் அறை, பிரதான வாசிப்பு மண்டபம், நூல்கள் வைப்பறை, புத்தக அல மாரிகள், நூல் வெளியீட்டு அரங்கம், தேநீர் விநியோகம், மின்சாதன கண்காணிப்பு அறை, மின்தூக்கி வசதிகள், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீனக் கழிப்பறை வசதிகள் உள்ளன.


மேலும், இப்படைப்பகத்தின் சுற்றுப்புறத்தில், திறந்தவெளி அரங்கம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அசோக் நகர் முதல்வர் படைப்பகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓட்டோரி, சுப்புராயன் தெருவில் 3.05 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், ஜமாலியா, மங்கள புரத்தில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், புளியந்தோப்பு, வெங்கடேசபுரத்தில் 1.28 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பட்டாளம், பக்தவச்சலம் பூங்காவில் 2.22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், ஆர். கே. நகர் தொகுதி, மேயர் பாசுதேவ் தெருவில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், எழும்பூர், சூளை, ராட்லர் தெருவில் 82 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பெரம்பூர் தொகுதி, எருக் கஞ்சேரியில் 1 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், ராயபுரம் தொகுதி, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடத்தில் 1.56 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் மற்றும் மயிலாப்பூர் தொகுதி, ராஜா அண்ணாமலைபுரத்தில் 3.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் திறந்து வைக்கப்பட்டன.

இதே போல் துறைமுகம் தொகுதி, கொண்டித்தோப்பு, அம்மன் கோயில் தெருவில் 4.24 கோடி ரூபாய் செலவில் சென்னை நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் என மொத்தம் 16.87 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 9 முதல்வர் படைப்பகங்கள் கொண்ட நவீன நூலகங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 4.24 கோடி செலவில் 1 முதல்வர் படைப்பகம் கொண்ட நவீன நூலகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

திரு.வி.க. நகர் மண்டலம், ராஜா தெருவில் 34.70 லட்சம் ரூபாய் செலவில் 1,206 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் கூட்டுறவு பண்டகச்சாலை நியாய விலைக் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திரு.வி.க. நகர் மண்டலம், லோகோ ஸ்கீம் 1வது தெருவில் 2.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த உள்விளையாட்டரங்கம் 22,560 சதுர அடி பரப்பளவில் குத்து சண்டை மேஜை, குத்து சண்டை உபகரணங்கள், வர்ணம் பூசுதல், மின்விளக்குகள், கழிவறை வசதிகள், கூடைப் பந்து மைதானம், பிக்கில் பால் மைதானம், நடைபாதை, செயற்கை தரை, சுற்றுப்புறச் சுவர், திறந்த வெளி உடற்பயிற்சி உபகரணங்கள், பசுமைப் படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

திரு.வி.க. நகர் மண்டலம், கபிலர் தெருவில் 7.64 கோடி ரூபாய் செலவில் சென்னை நடுநிலைப் பள்ளிக்காக கட்டப்பட்டு உள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

17 வகுப்பறைகள், அரங்கம், 15 கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து உட் கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ஜெ.ஜெ.எபிநேசர், பரந்தாமன், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறு வனத்தின் தலைவர் ப. ரங்கநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *