புதுடெல்லி:
ஈரானை இஸ்ரேல் தாக்கியதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா மார்ச் 21-ம் தேதி தாக்குதல் நடத்தும்.
ஒன்றிரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பெண் ஜோதிடர் ஒருவர் கூறியுள்ள கருத்து வைரலாகி வருகிறது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அத்துடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், ஈரானை அடுத்து பாகிஸ்தான் மீதுதான் தாக்குதல் நடக்கும். அதுவும் இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பெண் ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தன்னை வேத ஜோதிடர் என்றும் வாஸ்து நிபுணர் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த பெண் வீடியோவில் கூறியிருப்பதாவது:
கிரகங்களின் நிலை கிரகங்களின் நிலைகளை கணக்கிட்டுப் பார்க்கும் போது, மார்ச் 21-ம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது.
எனவே, கையில் ரொக்கப் பணம், மருந்துகள், சூரிய மின்சக்தி சார்ஜர்கள், உணவுப் பொருட்களை ஒன்றிரண்டு மாதங்களுக்குத் தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
மார்ச் 21-ம் தேதி பாகிஸ்தானை ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் சுற்றி வளைக்கும். மறுபக்கம் இந்தியா தாக்குதல் நடத்தும்.
ரம்ஜான் முடிந்து மார்ச் 19-ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. மார்ச் 21-ம் தேதி கிரகங்களின் நிலைகளைக் கணக்கிடும் போது தாக்குதலுக்கான கூறுகள் தென்படுகின்றன. துர்காவின் சக்தி இந்த தேசத்துடன் இருக்கும்.
அத்துடன் பிரதமர் மோடியின் மங்கள மகாதசை மற்றும் கிரகங்களின் நிலை ஆகியவை தாக்குதலுக்கு தூண்டுகோளாக அமையும். எனவே, மார்ச் 21-ம் தேதி வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமையபோகிறது.
இவ்வாறு அந்தப் பெண் ஜோதிடர் கூறியுள்ளார்.