சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!!

சென்னை:
சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘அரசன்’.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தாலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது.

தற்போது சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான காட்சிகளை சுமார் 35 நாட்கள் காட்சிப்ப்டுத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.

‘அரசன்’ படத்தில் முதலில் இயக்குநர் நெல்சன் நடிப்பதாக இருந்தது. ஆனால் ‘ஜெயிலர் 2’ பணிகள் மற்றும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகள் இருப்பதால், ‘அரசன்’ படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிக்கவுள்ளார்.

தாணு தயாரித்து வரும் ‘அரசன்’ படத்தின் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இதனை முடித்துவிட்டு ‘வடசென்னை 2’ படத்தினை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *