செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ்!

சென்னை:
செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. சமீபத்தில் இப்படத்தின் டீஸரை தனுஷ் வெளியிட்டார்.

இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவுசல்யா, மைம் கோபி, லிர்த்திகா, குஷி ரவி, சதீஷ் ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் செல்வராகவனுடன் நடித்துள்ளனர்.

இப்படத்தை விஜயா சதீஷ் மற்றும் ஆர்.எஸ்.சதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ரவி வர்மா, இசையமைப்பாளராக ஏ.கே.ப்ரியன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இப்படத்தின் தமிழக விநியோக உரிமையினை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *