ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டம்!!

வாஷிங்டன்:
ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுவதால், அதை கைப்பற்றும் நடவடிக்கையை அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களின் போக்கு வரத்துக்கு ஈரான் கடும் நிபந்தனை விதித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள போர்க் கப்பல்களை அனுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் ஏற்கவில்லை.

இந்த விஷயத்தில் நேட்டோ நாடுகள் உதவவில்லை என்றால், மோசமான எதிர்காலத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுகிறது. இத னால் ஈரானின் வருவாயை முடக்க, இந்த தீவுக்கு ராணுவத்தை அனுப்பி கைப்பற்றும் திட்டம் குறித்தும் அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார்.

ஆனால், இந்த தீவுக்கு அமெரிக்க ராணுவம் சென்றால், ஈரான் பதிலடியில் இறங்கும். சவுதி உட்பட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் கூறுகையில், “ஈரானுக்குள் ஊடுருவும் எண்ணம் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இல்லை.

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த மட்டுமே இரு நாடுகளும் கவனம் செலுத்துகின்றன” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *