உரிய ஆவணங்​கள் இன்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.1.52கோடி ரொக்கப் பணத்தை சென்னை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்!!

சென்னை:
உரிய ஆவணங்​கள் இன்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.1.52கோடி ரொக்கப் பணத்தை சென்னை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்​டப் பேர​வைத் தேர்​தலை​யொட்டி சென்​னை​யில் தேர்​தல் பறக்​கும் படை​யினர் தீவிர வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

அதன்படி சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட சேப்​பாக்​கத்​தில் உள்ள சுவாமி சிவானந்தா சாலை​யில் நேற்று காலை தேர்​தல் பறக்​கும் படை​யினர் தீவிர வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அந்த வழி​யாக வந்த ஆந்​திர பதிவெண் கொண்ட கார் ஒன்றை மறித்து சோதனை​யிட்​டனர். அதில் 12 கிலோ எடை​யுள்ள வெள்ளி குத்​து​விளக்​கு, தட்டு உள்​ளிட்ட பொருட்​கள் இருந்​தது தெரிய​வந்​தது.

காரில் வந்​தவர் சென்னை கிழக்கு கடற்​கரை சாலை​யில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றுக்​காக வெள்ளிப் பொருட்​களை கொண்டு சென்​றதும், நிகழ்ச்சி முடிந்து வெள்ளிப் பொருட்​களு​டன் ஆந்​திரா திரும்புவதும் தெரிய​வந்​தது. உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால் அவை பறி​முதல் செய்​யப்​பட்டன.

சென்னை எல்லீஸ் சாலை – வாலாஜா சந்திப்பு அருகே நேற்று மாலை துறைமுகம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக ரூ.35 லட்சம் பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர்சென்னை ஏழு கிணறு பர்தயார் தெருவை சேர்ந்த அனில்குமார் சிங் (47) என்பதும், ஜி.பி சாலையில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சவுக்கார்பேட்டையில் உள்ள ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக கூறினார்.

பணம் அசோக் நகரை சேர்ந்த பைனான்சியர் கமல்(55) என்பவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.

ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.35 லட்சத்தை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தம்​ப​தி​யிடம் ரூ.65,000 பறி​முதல் நெய்​வேலியைச் சேர்ந்த கணேசன் என்​பவர் தனது மனை​வி​யுடன் நேற்று காரில் சிந்​தா​திரிப்​பேட்டை காசினோ திரையரங்​கம் அருகே வந்​துள்​ளார்.

தேர்​தல் பறக்​கும் படை​யினர் அந்த காரை நிறுத்தி சோதனை செய்​தனர். தம்​ப​தி​யரிடம் இருந்த ரூ.65 ஆயிரத்தை பறி​முதல் செய்​தனர். அது வாடகை வீட்டுக்கான முன்பணம் என்று கூறப்பட்டது. ஆனால், உரிய ஆவணம் இல்​லாத​தால் பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.52 கோடி ரொக்கம் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *