“எங்​களை ஏன் திரு​மணத்​துக்கு அழைக்​க​வில்​லை” – கேள்விக் கேட்டு வருந்​திய சிறுமிக்கு ராஷ்மி​கா – ​விஜய் தேவரகொண்டா விருந்து!!

சென்னை:
நடிகர் விஜய் தேவர​கொண்​டா​வும் ராஷ்மிகா​வும் கடந்த பிப்​.26-ம் தேதி திரு​மணம் செய்​து​கொண்​டனர்.

உதய்ப்​பூரில் நடந்த அவர்கள் திரு​மணத்​தில் நெருங்​கிய உறவினர்​கள், நண்​பர்​கள் கலந்து கொண்​டனர்.

அதன்​பின் ஹைத​ரா​பாத்​தில் திருமண வரவேற்பு நடை​பெற்​றது. தங்​களது ரசிகர்​களுக்​காக​வும் அவர்​கள் விருந்து வைத்​தனர்.

இந்​நிலை​யில், இவர்​கள் திரு​மணத்​துக்​குப் பிறகு திதி என்ற சிறுமி “எங்​களை ஏன் திரு​மணத்​துக்கு அழைக்​க​வில்​லை” என இன்ஸ்டாகி​ராமில் வீடியோ ஒன்​றைப் பதி​விட்டு வருத்​தம் தெரிவித்​திருந்​தார்.

அந்த வீடியோவை பார்த்த விஜய் தேவர​கொண்​டா, அவரை தங்​களது வீட்​டுக்கு அழைத்து விருந்து வைப்பதாக கமென்ட் செய்​திருந்​தார்.

இந்​நிலை​யில், வாக்​குக் கொடுத்​த​படியே அச்​சிறுமியை குடும்பத்தினருடன் அழைத்து தங்​கள் வீட்​டில் ராஷ்மிகா​வும் விஜய் தேவர​கொண்​டா​வும் விருந்து வைத்​துள்​ளனர்.

அவர்​களே சிறுமிக்கு உணவு பரி​மாறி, பரிசுகளை​யும் கொடுத்​துள்​ளனர். இந்தச் சந்​திப்பை அந்த சிறுமி வீடியோ​வாக வெளி​யிட்​டுள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *