ஈ​ரான் மீதான தாக்​குதலை தற்​காலிக​மாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​விப்​பு!!

நியூயார்க்:
ஈ​ரான் மீதான தாக்​குதலை தற்​காலிக​மாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்​ரூத் சோஷியல்’ தளத்​தில் நேற்று முன்தினம் பதிவிட்டார்.

இந்த அறி​விப்​பு வெளியாவதற்கு சில நிமிடங்​களுக்கு முன்​ன​தாக, சர்வதேச சந்​தை​யில் நடந்த வர்த்​தகம் மூலம் மர்ம நபர் ஒரு​வர் வெறும் 20 நிமிடங்​களில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.

இதுகுறித்து சந்தை ஆய்​வாளர்​கள் கூறிய​தாவது: திங்​கள்​கிழமை காலை நியூ​யார்க் நேரப்​படி 6:50 மணிக்கு (இந்​திய நேரப்​படி மாலை 4:20 மணி) இரண்டு முக்​கிய ஒப்பந்தங்கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

அதன்​படி முதலா​வ​தாக, எஸ் அண்ட் பி 500 பியூச்​சர் குறி​யீட்​டில் சுமார் ரூ.12,600 கோடி மதிப்​பிலான பங்​கு​கள் வாங்கப்பட்டுள்​ளன.

அதே நேரத்​தில், இரண்​டாவ​தாக கச்சா எண்​ணெய் பியூச்சர் சந்​தை​யில் ரூ.1,615 கோடி மதிப்​பிலான விற்​பனை ஒப்​பந்​தங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. பொது​வாக, உலகளவில் நிச்​சயமற்ற சூழலில் வர்த்​தகம் மந்​த​மாக இருக்​கும் அதி​காலை வேளை​யில், எந்​த​வித முன்னறிவிப்பும் இன்றி இவ்​வளவு பெரிய தொகையை ஒரு​வர் முதலீடு செய்​தது சந்​தையை வியப்​பில் ஆழ்த்தியுள்​ளது.

ட்ரம்​பின் அறி​விப்பு வெளி​யானவுடன் பங்​குச்​சந்தை 2.5% உயர்ந்​தது. அதேசம​யம் கச்சா எண்​ணெய் விலை பீப்​பாய்க்கு 109 டாலரிலிருந்து 92 டால​ராகச் சரிந்​தது.

இதன் மூலம், கச்சா எண்​ணெய் வர்த்​தகத்​தில் மட்​டும் அந்த மர்ம நபர் வெறும் 20 நிமிடங்​களில் ரூ.840 கோடி லாபம் பார்த்துள்​ளார்.

பங்​குச்​சந்தை உயர்​வை​யும் கணக்கிட்டால் இந்த லாபம் பன் மடங்கு அதி​க​மாகவே இருக்​கும் எனத் தெரி​கிறது. இவ்​வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

போர் தொடர்​பான முக்​கிய அறி​விப்பு வெளி​யா​வதற்கு சில நிமிடங்​களுக்கு முன்​பாக இவ்​வளவு துல்​லிய​மாக வர்த்​தகம் செய்​யப்​பட்​டுள்​ள​தால், அரசின் ரகசி​யத் தகவல்கள் முன்​கூட்​டியே கசிந்​ததா என்ற சந்​தேகம் எழுந்துள்​ளது. எனினும், வெள்ளை மாளிகை செய்​தித் தொடர்​பாளர் குஷ் தேசாய் இப்​பு​கார்​களை மறுத்​துள்​ளார்.

‘‘அதிபர் ட்ரம்​பின் நிர்​வாகம் அமெரிக்க மக்​களின் நலனுக்காக மட்​டுமே செயல்​படு​கிறது. ஆதா​ரமற்ற இத்​தகைய குற்​றச்​சாட்​டு​கள் பொறுப்​பற்​றவை’’ என்று அவர் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கப் பங்​குச் சந்தை கட்டுப்பாட்டு வாரி​யம் இதுகுறித்து எந்​த​வித அதி​காரப்​பூர்வ கருத்தை​யும்​ தெரிவிக்​கவில்​லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *