திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் போட்​டி​யிடும் 5 வேட்​பாளர்​கள் அறிவிப்பு!!

சென்னை/விழுப்​புரம்:
திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் போட்​டி​யிடும் 5 வேட்​பாளர்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி திமுக​வுடன் நடை​பெற்ற தொகுதி பங்​கீட்டு பேச்​சு​வார்த்​தை​யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகு​திகள் ஒதுக்கப்பட்டன. தொகு​தி​கள் உள்ள அந்​தந்த மாவட்​டங்​களில் மாவட்​டக் குழு கூட்​டத்​தை​ கூட்​டி வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.

இறு​தி​யாக கட்​சி​யின் மாநில செயற்​குழு உறுப்​பினர் கே.அர்ச்​சுணன் தலைமையில் சென்னையில் நடந்த கூட்​டத்தில் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இதன்​முடி​வில் என்​.​பாண்டி பழநி தொகு​தி​யிலும், எம்​.சின்​னதுரை கந்​தர்​வக்​கோட்​டை​யிலும் (தனி), ஆர்​.செல்​லசாமி பத்​ம​நாபபுரத்​திலும், எல்​.சுந்​தர​ராஜன் திரு​வொற்​றி யூரிலும், டி.லதா கீழ்​வேளூர் (தனி) தொகு​தியிலும் போட்​டி​யிடு​வார்​கள் என அறிவிக்​கப்​பட்​டது.

இதில் எம்​.சின்​னதுரை, கந்​தர்​வக்​கோட்​டை​யில் ஏற்​கெனவே எம்​எல்​ஏ​வாக உள்​ளார். என்​.​பாண்டி கடந்த முறை திண்​டுக்​கல்​லில் போட்​டி​யிட்டு தோல்​வியடைந்​திருந்த நிலை​யில் அவருக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​பட்​டு உள்​ளது.

அதே​நேரம் கடந்த தேர்​தலில் கீழ்​வேளூரில் வெற்​றி​பெற்ற நாகை மாலிக்கு இம்​முறை வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை.

அவருக்கு பதிலாக கட்​சி​யின் நாகப்​பட்​டினம் மாவட்ட செயற்​குழு உறுப்​பினர் டி.ல​தாவுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இதேபோல் பாமக நிறு​வனர் ராம​தாஸ், புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்ற கழக பொதுச் செய​லா​ளர் சசிகலா​வுடன் இணைந்து தேர்​தலை சந்​திக்​கும் நிலை​யில் அவரது அணி சார்​பில் போட்​டி​யிடும் முதல்​கட்ட வேட்​பாளர் பட்​டியலை ராம​தாஸ் அறி​வித்​துள்​ளார்.

அதன் விவரம்: சேலம் மேற்கு தொகு​தி​யில் மாநில இணைபொது செய​லா​ளர் அருள் எம்​எல்ஏ, வந்​த​வாசி (தனி) தொகு​தி​யில் மாநில பொதுச் செய​லா​ளர் முரளி சங்​கர், கும்​பகோணம் தொகு​தி​யில் மாநில நிர்​வாகக் குழு உறுப்​பினர் ம. க.ஸ்​டா​லின், விருத்​தாசலம் தொகு​தி​யில் மாவட்ட செய​லா​ளர் சுரேஷ், மயி​லாடு​துறை தொகு​தி​யில் மாவட்ட செய​லா​ளர் பாக்​கம் சக்​திவேல் ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *