ஈ​ரானின் இஸ்​ப​கான் நகரில் உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்’ குண்டை வீசி​யது!!

டெஹ்ரான்:
ஈ​ரானின் இஸ்​ப​கான் நகரில் உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்’ குண்டை வீசி​யது. இதில் ஆயுத கிடங்கு வெடித்​துச் சிதறி தரைமட்​ட​மானது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரு​கிறது. ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள ராணுவ முகாம்​களை குறி வைத்து அமெரிக்க, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று குண்​டுமழை பொழிந்தன.

மேலும் ஈரானின் இஸ்​ப​கான் நகரில் பூமிக்கு அடி​யில் அமைக்​கப்​பட்டு உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்​கர்’ குண்டை வீசி​யது.

இந்த குண்டு பூமியை துளைத்​துச் சென்று ஆயுத கிடங்கை துல்​லிய​மாகத் தாக்​கியது. இதில் ஆயுத கிடங்கு வெடித்​துச் சிதறி தரைமட்​ட​மானது. இதுதொடர்​பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலை​தளத்​தில் வெளியிட்டிருக்​கிறார்.

ஈரானின் இஸ்​ப​கான் நகரில் அணு சக்தி தளம் செயல்​படு​கிறது. அங்​குள்ள யுரேனி​யத்தை கைப்​பற்ற அமெரிக்கா திட்​ட​மிட்டு இருக்​கிறது.

இதற்​காக அமெரிக்க வீரர்​கள் பாராசூட் மூலம் இஸ்​ப​கான் அணு சக்தி தளத்​தில் தரை​யிறங்கி யுரேனி​யத்தை எடுத்​துச் செல்ல வியூ​கம் வகுக்​கப்​பட்டு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்கு முன்​னோட்​ட​மாக இஸ்​ப​கான் நகரில் உள்ள அனைத்து ராணுவ தளங்​கள், ஆயுத கிடங்​கு​களை அமெரிக்க ராணுவம் அழித்து வரு​கிறது.

ஈரானின் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் உள்ள தீவில் கடல்​நீர் சுத்​தி​கரிப்பு மையம் செயல்​பட்டு வந்​தது.

அந்த சுத்​தி​கரிப்பு மையத்தை அமெரிக்க போர் விமானம் நேற்று குண்​டு​களை வீசி தரைமட்​ட​மாக்​கியது.

இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “ஈரான் மீது புதன்​கிழமை மிகப்​பெரிய வான்​வழி தாக்​குதல் நடத்​தப்​படும். அப்​போது ஈரானின் ராணுவ தளங்​கள், ஆயுத கிடங்​கு​கள் முழு​மை​யாக அழிக்​கப்​படும்’’ என்று தெரி​வித்​தன.

தேசத் துரோக குற்​றச்​சாட்​டின் பேரில் கடந்த சில வாரங்​களில் ஈரான் முழு​வதும் 1,000 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

இவர்​கள் அமெரிக்​கா, இஸ்​ரேலுக்கு உளவுத் தகவல்​களை வழங்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக ஈரான் ராணுவம் கூறும்​போது, “தேசத்​துரோக குற்​றத்​தில் ஈடு​படு​பவர்​களுக்கு மன்​னிப்பே கிடை​யாது.

அவர்​களுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும். அவர்​களின்​ சொத்​துகள்​ அரசுடமை ஆக்​கப்​படும்​’’ என்​று எச்​சரிக்​கை விடுத்துள்​ளது.

குவைத் நாட்​டுக்கு சொந்​த​மான அல் – சல்மி என்ற எண்ணெய் கப்​பல், ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் துறை​முகத்​தில் நிறுத்​தப்​பட்டு இருந்​தது. அந்த எண்​ணெய் கப்​பல் மீது ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது.

அந்த கப்​பலில் 20 லட்​சம் பேரல் கச்சா எண்​ணெய் ஏற்​றப்​பட்டு இருந்​தன. அவை தீப்​பிடித்து எரிந்​தன. துபாய் தீயணைப்பு வீரர்​கள் விரைந்து செயல்​பட்டு தீயை அணைத்​தனர். கப்​பலில் இருந்த மாலுமிகள் உட்பட 24 பேரும் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

இஸ்​ரேலின் சால்​வோஸ் பகு​தியை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. இதில் 8 பேர் காயமடைந்​தனர்.

இதுதொடர்​பாக இஸ்​ரேல் ராணுவ வட்டாரங்​கள் கூறும்​போது, “போரின் தொடக்​கத்​தில் இஸ்ரேல் பகு​தி​களைக் குறி​வைத்து ஈரான் ராணுவம் தினமும் 90 ஏவு​கணை​களை வீசி​யது.

தற்​போது அந்த நாட்டில் ஏவு​கணை​களின் இருப்பு குறைந்​து​விட்​டது. எனவே தின​மும் 10 ஏவு​கணை​கள் மட்​டுமே வீசப்படுகின்றன’’ என்று தெரி​வித்​தன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *