சென்னை:
‘பிசாசு 2’ மற்றும் ‘மனுஷி’ படத்தின் நிலை குறித்த கேள்விக்கு ஆண்ட்ரியா பதிலளித்துள்ளார், மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மனுஷி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ஆண்ட்ரியா.
ஆனால், இரண்டு படங்களுமே நீண்ட மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. குறிப்பாக ‘பிசாசு 2’ நீண்ட வருடங்களாகவே வெளியிட முடியாமல் இருக்கிறது.
‘மனுஷி’ தணிக்கை பிரச்சினையில் சிக்கினாலும், அது சரி செய்யப்பட்டு வெளியிட முடியாமல் இருக்கிறது.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் ஆண்ட்ரியா. அவரிடம் ‘பிசாசு 2’ மற்றும் ‘மனுஷி’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு “இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இரண்டு படமுமே தயாரிப்பாளர் பிரச்சினையில் இருக்கிறது. யாராவது இணைந்து படத்தை வெளியே கொண்டு வந்தால் மகிழ்ச்சி.
இரண்டு படமுமே வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஆண்ட்ரியா.
இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.