சென்னை:
‘‘நான் சிறை சென்றபோது ஒருவரிடம் கட்சி பதவியையும், மற்றொருவரிடம் ஆட்சி அதிகாரத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றேன்.
நான் நம்பிய இருவரும் என்னை ஏமாற்றி விட்டனர்’’ என்று முதுகுளத்தூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சசிகலா பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற கழக வேட்பாளர்களை ஆதரித்து சசிகலா பேசுகையில்,
‘‘நான் சிறைக்குச் சென்றபோது, ஒருவரிடம் கட்சி பதவியையும், மற்றொருவரிடம் ஆட்சி அதிகாரத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றேன்.
நான் திரும்பி வரும்போது பார்த்தால் நிலைமை மாறிவிட்டது.
நான் நம்பிய இருவர் என்னை ஏமாற்றிவிட்டனர். பதவி கொடுத்தவருக்கு விசுவாசமாக இல்லாதவர்கள் மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்கள்? எனவே, அவர்களை நம்ப முடியாது.
திமுக கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. திமுக அரசு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துள்ளது.
கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. அதனால் இவர்களையும் வரவிடக் கூடாது’’ என்றார்.