அட்சய திரு​தியை ஒட்​டி, நகைக்கடைகளில் குவிந்​த பொது​மக்​கள்!!

சென்னை:
அட்சய திரு​தியை ஒட்​டி, நகைக்கடைகளில் பொது​மக்​கள் குவிந்​தனர். பெரும்பாலோர் எடை குறை​வான தங்க ஆபரணங்​கள், நாண​யங்​களை வாங்க ஆர்​வம் காட்​டினர்.

அட்சய திரு​தியை நாளில் தங்​கம் மற்​றும் வெள்ளி நகைகள் வாங்​கு​வது பொது​மக்​களின் வழக்​க​மாக உள்​ளது.

இந்த ஆண்​டுக்​கான அட்சய திருதியை நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் பொது​மக்​கள் குவிந்​தனர்.

சென்னையில் தி. நகர், புரசை​வாக்​கம், பாரி​முனை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் உள்ள கடைகளில் காலை முதலே மக்கள் ஆர்வமாக நகைகளை வாங்கினர். இது குறித்​து, நகை வியா​பாரி​கள் சங்க நிர்​வாகி​கள் கூறிய​தாவது:

அட்சய திரு​தியை கொண்​டாட்​டத்​தையொட்​டி, தமிழகம் முழு​வதும் 35 ஆயிரம் நகைக் கடைகள் காலை 8 மணிக்கே திறக்​கப்​பட்​டன.

தியாக​ராய நகரில் உள்ள நகைக் கடைகளில் வழக்​க​மான மக்​கள் கூட்​டம் காணப்​பட்​டது.

அதே​நேரத்​தில், எடை குறைந்த ஆபரணங்​கள், நாண​யங்​களை அதிக அளவில் வாங்​கினர்.

இருப்​பினும், கடந்த ஆண்டை விட மக்​கள் வருகை சற்று குறை​வாக இருந்​தது. இதற்கு காரணம். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தான்.

தேர்​தல் விதி​முறை​கள் காரண​மாக, பணத்தை எடுத்து வரமுடி​யாது என்ற பயம் இருக்​கிறது.

இரண்டு நாள் அட்சய திரு​தியை இருப்​ப​தால், திங்​கள்​கிழமை​யும் நகைகளை வாங்க வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கிறோம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *