தமிழகத்துக்கு எத்தனை அரவிந்த் கேஜ்ரிவால்கள், ராகுல்கள் வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது – தமிழிசை!!

சென்னை:
“தமிழகத்துக்கு எத்தனை அரவிந்த் கேஜ்ரிவால்கள், ராகுல்கள் வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நாங்கள் ஓட்டுக் கேட்டு மட்டும் செல்லவில்லை.

அந்தந்தப் பகுதியில் உள்ள பிரச்சினைகளை குறித்து வைத்துள்ளோம். வெற்றி பெற்ற நூறு நாட்களில் அப்பகுதி மக்களின் அடைப்படை தேவைகளை பூர்த்தி செய்வோம். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தயாராக இருக்கிறேன்.

பல இடங்களை தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. இவை அனைத்தும் சரி செய்யப்படும். எத்தனையோ தேர்தல்களை நான் சந்தித்துவிட்டேன்.

நாங்களும் கட்சியுடன் சேர்ந்து வளர்ந்து வருகிறோம். தற்போது எனக்கு மயிலாப்பூர் மக்கள் வாக்களிக்க வேண்டும். மீனவ பெண்களுக்கு தனி திட்டம் வைத்துள்ளேன். திமுகவின் கவுன்டவுன் ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்துக்கு எத்தனை அரவிந்த கேஜ்ரிவால்கள், ராகுல்கள் வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது. அமித் ஷாவின் ரோடு ஷோ நல்ல விதமாக அமைந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *