விக்ரம் பிரபு நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சென்னை:
விக்ரம் பிரபு நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘சிறை’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் விக்ரம் பிரபு. பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டாலும், எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்.

இறுதியாக அறிமுக இயக்குநர் சித்தார்த்தின் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சித்தார்த் இயக்க, நாயகனாக விக்ரம் பிரபு நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

இதில் விக்ரம் பிரபு உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது படக்குழு.

சித்தார்த் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் புதுமுக இயக்குநர் கதையில் நடிக்க விக்ரம் பிரபு முடிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *