இன்றைய பஞ்சாங்கம்!!

பராபவ ஆண்டு, சித்திரை-15 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி இரவு 8.41 வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 12.06 வரை பிறகு அஸ்தம்

யோகம் : அமிர்த/சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ரதோற்சவம். தூத்துக்குடி ஸ்ரீ நடராஜர் பச்சை சாற்றி புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனசேவை.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் – சிறப்பு

ரிஷபம் – மேன்மை

மிதுனம் -ஆதரவு

கடகம் – பெருமை

சிம்மம் – தாமதம்

கன்னி – ஜெயம்

துலாம் – பரிசு

விருச்சிகம் – அனுகூலம்

தனுசு – இன்பம்

மகரம் – உயர்வு

கும்பம் -பொறுமை

மீனம் – லாபம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *