பழநி:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மே 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் நடைபெற இருக்கிறது என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் திருச்செந்தூருக்குச் சென்று முருகனை வழிபட்டுள்ளார்.
இது ஒரு சிறந்த நாள். அவருடைய தொலைநோக்குச் சிந்தனை, நாளை தமிழகத்தை ஆளுவது, மக்களால் ஒரு மனதாக அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதே எல்லோருடைய எண்ணங்களாக உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை உலகளவில் முதலில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, சமூகப் புரட்சி நடந்துள்ளது வரும் 4-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் விசில் புரட்சிதான் நடைபெற இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.