தமிழகம் முழுவதும் 83 மாவட்ட அமர்வு நீதிபதிகள் இடமாற்றம்!!

சென்னை:
தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உள்பட தமிழகம் முழுவதும் 83 மாவட்ட அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி 83 மாவட்ட நீதிபதிகளை இடமாறுதல் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி என்.லோகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளராக (ஆய்வு) இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றிய நீதிபதி கே.சுதா திருவள்ளூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதி ஏ.ஆனந்தகுமார் விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சிவகடாட்சம் ராமநாதபுரம் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற 6-வது கூடுதல் நீதிபதி வி.பாண்டிராஜ் காஞ்சிபுரம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதியாகவும், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி எம்.எழிலரசி விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இ.சசிகலா, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், செங்கல்பட்டு வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி டி.சுஜாதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும், நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி எம்.சாய் சரவணன் மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.வேங்கடவரதன் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம், சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபாதேவி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி பி.மதிசூதனன் சென்னை சிறுவழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதியாகவும் இடமாறுதல் செய்யப்பட்டு்ள்ளனர்.

இதேபோல தமிழகம் முழுவதும் மொத்தம் 83 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இ.சசிகலா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டி.சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *