என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி.செளத்ரி எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர் – ரஜினிகாந்த் புகழஞ்சலி

சென்னை:
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி.செளத்ரி எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

“என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.

அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.

அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *