சென்னை:
நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியது. ரெட்ரோ 2 மணி நேரம் 48 நிமிட படமாக அமைந்துள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கேரளாவில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் சூர்யா ” நான் சிகரெட் திரைப்படத்திற்காக மட்டுமே புகைக்கிறேன். தயவு செய்து நீங்கள் அதை உபயோகிக்காதீர்கள்.
ஒரு சிகரெட் தானே, ஒரு பஃப் தான என நினைக்காதீர்கள் அது உங்களை அடிமையாக்கிவிடும். நான் எச்சூழ்நிலையிலும் புகைப்பிடிப்பதை ஆதரிக்க மாட்டேன்.
திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன். கண்டிப்பாக திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும். உங்கள் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வித்தியாசமான கதைக்களத்துடன் கண்டிப்பாக அடுத்து அடுத்து நல்ல திரைப்படங்களில் நடிப்பேன்” என கூறினார்.
படத்தின் டிக்கெட் முன்பதிவு பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி திரைப்படமாக சூர்யாவுக்கு அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.