தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர்!! ஆளுநரை எதிர்க்கும் துணிவு விஜய்யிடம் உள்ளதா? அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும் – ஆளூர் ஷாநவாஸ்!!

சென்னை:
‘தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும்.

அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜய்யிடம்?’ என விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக.

இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது ஆர்.என்.ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும்.

ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?’ எனத் தெரிவித்துள்ளார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *