சென்னை:
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் “ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும், நேரடி பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை.
புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் உளமார மதிக்கிறோம்.
ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்த கட்சிக்கும் வாக்களிக்கமாட்டோம்” என்றார்.
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்து ஆதரவு கொடுத்துள்ளது.
இரண்டு கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
கம்யூனிஸ்டு கட்சிகள் இன்று மாலை தங்களது முடிவை அறிவிக்க இருக்கின்றன. விசிக நாளை அறிவிக்கிறது.
ஒருவேளை கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக ஆதரவு அளிக்கவில்லை என்றால், தனிப்பெரிய கட்சி என்ற முறையில் அழைத்து, சட்ட சபையில் பலத்தை நிரூபிக்கக்கோரி ஆளுநருக்கு கோரிக்கை வைப்பார்.
இதற்கு ஆளுநர் சம்மதிக்கவில்லை என்றால், த.வெ.க. நீதிமன்றத்தை நாடலாம்.