12-ந் தேதி (செவ்வாய்)
- நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, சென்னகேசவப் பெருமாள் தலங்களில் விடையாற்று உற்சவம்.
- வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.
- காரைக்குடி கொப்புடையம்மன் விழா தொடக்கம்.
- கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (புதன்)
- முகூர்த்த நாள்.
- சர்வ ஏகாதசி.
- திருவரங்கம் நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் புறப்பாடு.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
- மேல்நோக்கு நாள்.
14-ந் தேதி (வியாழன்)
- முகூர்த்த நாள்.
- பிரதோஷம்.
- திருவரங்கம் நம்பெருமாள் ரத உற்சவம்.
- காரைக்குடி கொப்புடையம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
- தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
- சமநோக்கு நாள்.
15-ந் தேதி (வெள்ளி)
- வீரபாண்டி கவுமாரியம்மன் ரத உற்சவம்.
- சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
- சமநோக்கு நாள்.
16-ந் தேதி (சனி)
- அமாவாசை.
- நெல்லை கயிலாசபுரம் கயிலாச நாதர் உற்சவம் ஆரம்பம்.
- திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
- கீழ்நோக்கு நாள்.
17-ந் தேதி (ஞாயிறு)
- கார்த்திகை விரதம்.
- காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி.
- சிவகாசி விசுவநாதர் விழா தொடக்கம்.
- கீழ்நோக்கு நாள்.
18-ந் தேதி (திங்கள்)
- முகூர்த்த நாள்.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விழா தொடக்கம்.
- சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் பவனி.
- மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
- மேல்நோக்கு நாள்.