இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியை இந்து கோவிலாக அறிவித்த நீதிபதிகள்!!

மத்திய பிரதேசம்;
மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியை, இந்து கடவுள் சரஸ்வதி தேவியின் கோவிலாக அறிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.


போஜ்ஷாலா வளாகத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வரும் நிலையில், தங்களின் முன்னோர்கள் வழிபட்ட கோவில் என்று இந்து அமைப்புகள் மத்தியப்பிரேதச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், “ ராஜா போஜுடன் தொடர்புடைய சமஸ்கிருத கற்றல் மையமாக இந்த இடம் விளங்கியுள்ளது என்பதை வரலாற்று இலக்கியங்கள் நிறுவுகின்றன.


தார் மாவட்டத்தில் சரஸ்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் இருந்ததை இந்த ஆய்வுகள் குறிக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், இரு தரப்பினரிடையே முழுமையான நீதியை உறுதி செய்வதற்காக வும், தார் மாவட்டத்தில் மசூதி அமைப்பதற்குப் பொருத்தமான நிலத்தை ஒதுக்கக் கோரி பரிசீலிக்கப்படுகிறது.

மேலும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதி தேவியின் சிலையை மீட்டு வந்து, தார் மாவட்டத்தில் உள்ள போஜ்ஷாலா தளத்தில் நிறுவும்படி இந்திய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் பரிந்துரைக்கிறது” என்று தீர்ப்பளித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *