கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்​டன்ஸ் அணி​கள் இன்று மோதல்!!

கொல்கத்தா:
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 6 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 9 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 8-வது இடத்​தில் உள்​ளது.

அந்த அணி நடப்பு சீசனில் முதல் வெற்​றியைப் பதிவு செய்ய 7-வது போட்டி வரை காத்​திருக்க வேண்​டி​யிருந்​தது. இந்​தத் தொடர் முழு​வதும் அந்த அணி நிலைத்​தன்மை இல்​லாத அணி​யாகவே இருந்து வரு​கிறது.

வீரர் தேர்​வு​கள், பேட்​டிங் வரிசையில் செய்​யப்​பட்ட மாற்​றங்​கள் அணி​யின் சீரான ஆட்டத்தை வெகு​வாகப் பாதித்​திருந்​தது.

முதல் 6 ஆட்​டங்​களில் வெற்றி பெறாத கொல்​கத்தா அணி அதன் பின்​னர் மீண்டு வந்து தொடர்​சி​யாக 4 ஆட்​டங்​களில் வெற்றி கண்டது.

ஆனால் கடைசி​யாக ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் மோச​மான ஃபீல்​டிங் மற்​றும் விராட் கோலி​யின் அபார​மான பேட்​டிங் காரண​மாக தோல்வி அடைய நேரிட்​டது.

இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 3 ஆட்​டங்​களி​லும் கொல்கத்தா அணி வெற்றி பெற்​றாலும் அதி​கபட்​ச​மாக 15 புள்ளிகளை மட்​டுமே பெற முடி​யும். இது நிகழ்ந்​தா​லும் அந்த அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற முடி​யுமா என்​பது சந்தேகம்தான்.

ஏனெனில் மற்ற அணி​களின் வெற்​றி, தோல்வி​களை பொறுத்தே கொல்​கத்தா அணி​யின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரிய​வரும்.

ஒரு​வேளை இன்​றைய ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி தோல்வி அடைந்​தால் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை இழக்க நேரிடும்.

ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் வருண் சக்​ர​வர்த்தி காயம் காரண​மாக களமிறங்கவில்​லை.

வருண் சக்​ர​வர்த்தி இல்​லாதது அணி​யின் பந்​து​வீச்​சில் எதிரொலித்​தது. இன்​றைய ஆட்​டத்​தில் அவர், களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பேட்​டிங்​கில் அங்​ரிஷ் ரகு​வன்ஷி 4 அரை சதங்​களு​டன் 340 ரன்​கள் சேர்த்​துள்​ளார்.

இதே​போன்று ரிங்கு சிங் 148.95 ஸ்டிரைக் ரேட்​டில் 2 அரை சதங்​களு​டன் 286 ரன்கள் எடுத்​துள்​ளார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜராத் டைட்​டன்ஸ் அணி இந்த சீசனில் முழுமை பெற்ற அணிகளில் ஒன்​றாகக் காட்​சி​யளிக்​கிறது.

தொடர்ச்​சி​யாக ஐந்து போட்​டிகளில் வெற்றி பெற்​றுள்ள அந்த அணி 16 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது.

12 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 8 வெற்​றி, 4 தோல்விகளை பதிவு செய்​துள்​ளது.

இன்​றைய ஆட்​டத்​தில் குஜ​ராத் அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் 18 புள்​ளி​களு​டன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்​னேறும் வாய்ப்பை பலப்​படுத்​திக் கொள்​ளும்.

குஜராத் டைட்​டன்ஸ் அணி​யின் எழுச்​சிக்​கு, சரி​யான நேரத்​தில் ஒருங்​கிணைந்து செயல்​பட்ட அவர்​களது பந்​து​வீச்சு கூட்​ட​ணியே முக்​கிய காரணம்.

இந்த வெற்​றிப் பயணத்​தின் போது காகிசோ ரபாடா 2 முறை ஆட்ட​நாயகன் விருதுகளைப் பெற்​றுள்​ளார். ஜேசன் ஹோல்​டரும் தனது பங்​குக்கு 2 விருதுகளை வென்றுள்ளார்.

அதே நேரத்​தில், ரஷித் கான் தனது பழைய மாயாஜால பந்​து​வீச்சை மீட்டெடுத்துள்ளதும் பலம் சேர்த்​துள்​ளது.

பேட்​டிங்​கில் டாப் ஆர்டரில் ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் வலு​வாக உள்​ளனர். இதில் சாய் சுதர்​சன் நடப்பு சீசனில் 501 ரன்​களை குவித்​துள்​ளார்.

நடப்பு சீசனில் அதிக ரன்​கள் குவித்​துள்ள வீரர்​களின் பட்​டியலில் முதலிடத்​தில் இருக்​கும் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யின் ஹென்​ரிச் கிளாசனை விட வெறும் 7 ரன்​கள் மட்​டுமே சாய் சுதர்​சன் பின்​தங்​கி​யுள்​ளார்.

தனது கடைசி ஆறு இன்​னிங்​ஸ்​களில் ஒரு சதம் உட்பட ஐந்து அரைசதங்​களை விளாசி​யுள்ள சாய் சுதர்சனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்​டைவீச்சு வெளிப்படக்கூடும். ஷுப்​மன் கில்​லும் சிறந்த ஃபார்​மில் உள்​ளார்.

நடு​வரிசை​யில் வாஷிங்​டன் சுந்​தர் தனது அதிரடி​யால் பலம் சேர்த்து வரு​கிறார். இவர்​களு​டன் ஜாஸ் பட்​லரும் மட்​டையை சுழற்​றத்​ தொடங்​கி​னால்​ அணி​யின்​ பலம்​ மேலும்​ அ​திகரிக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *