தேயிலைத் தோட்​டத் தொழிலாளர்களுடன் விக்ரம்!!

சென்னை:
நடிகர் விக்​ரம் அடுத்து ஆனந்த் ஷங்​கர் இயக்​கும் படத்​தில் ஹீரோவாக நடிக்​கிறார்.

இதில் நாயகி​யாக ரியா ஷிபு நடிக்​கிறார். பிரம்மாண்ட ஆக் ஷன் படமாக உரு​வாகும் இதன் படப்​பிடிப்பு விரை​வில் தொடங்க இருக்​கிறது.

இந்​நிலை​யில் மூணாறு சென்​றுள்ள நடிகர் விக்​ரம் அங்கு பணியாற்​றிக் ​கொண்​டிருந்த தேயிலைத் தோட்​டத் தொழிலாளிகளைச் சந்​தித்​தார்.

அவர்​கள் விக்​ரம் நடித்த திரைப்​படங்​களில் தங்​களுக்​குப் பிடித்​தது பற்றி அவரிடம் பேசினர்.

பின்​னர் அவர்​களு​டன் இணைந்து ‘அந்​நியன்’ படத்​தில் இடம்பெற்ற, ‘அண்​டங்​காக்கா கொண்​டக்​காரி’ பாடலைச் பாடி மகிழ்ந்​தார்.

அவர்​கள் விக்​ர​முடன் வீடியோ எடுத்​துக்​கொண்​டனர். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வேக​மாக பரவி வரு​கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *