இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்…

சென்னை:
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான், ரெட்ரோ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ரசிகர் பட்டாளே கொண்டவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ஒவ்வொரு படங்களிலும் தனக்கென தனி முத்திரையை பிரதிபலிக்கும் வகையில் படமாக்குவதில் சிறப்பு பெற்றவர்.

இவர் இயக்கிய 9 படங்களில் பேட்ட படத்தை தவிர்த்து மற்ற 8 படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஒவ்வொரு படங்களிலும் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டவர் கார்த்திக் சுப்பராஜ்.

இந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 10-வது படத்தில் இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ், முதன் முறையாக இளையராஜாவை தன் படத்திற்கு இசையமைக்க வைத்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எக்ஸ் தள பக்கத்தில், ‘கனவு 10 ஆசீர்வாதம் 1540’ என்ற தலைப்புடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *