இலங்கை முள்ளிவாய்க்காலில் 17-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்​தும் நிகழ்ச்சி !!

ராமேசுவரம்:
இலங்கை முள்​ளி​வாய்க்​காலில் இறு​திப் போரின்​போது உயி​ரிழந்​தோருக்கு 17-ம் ஆண்டு நினைவு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

அந்​நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்து ஏராள​மானோர் திரண்டு வந்து அஞ்​சலி செலுத்​தினர்.

இலங்​கை​யின் உள்​நாட்​டுப் போரில் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி முள்​ளி​வாய்க்​காலில் தமிழர்​கள் மீது அந்​நாட்டு ராணுவம் நடத்​திய தாக்​குதலில் ஆயிரக்​கணக்​கானோர் கொல்​லப்​பட்​டனர்.

இதை நினை​வு​ கூரும் வகை​யில் மே 18-ம் தேதியை இன அழிப்பு நாளாக வடக்கு மாகாண சபை​யில் பிரகடனம் செய்து அனைத்து உறுப்​பினர்​களும் ஏக மனதாக தீர்​மானம் நிறைவேற்​றினர்.

இந்​நிலை​யில், இறு​திப் போரில் உயி​ரிழந்​தோருக்கு 17-ம் ஆண்டு நினைவு அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்​சி, முல்​லைத்​தீவு மாவட்​டத்​தில் உள்ள முள்​ளி​வாய்க்​காலில் நேற்று நடை​பெற்​றது.

இதையொட்டி நினை​வுச் சுடர் ஏற்​றப்பட்டது.பின்​னர் வெளி​யிடப்​பட்ட மே 18 பிரகடனத்​தில் ‘தமிழ் தேசி​யத்​தின் மீதான நம்​பிக்​கை​யின் மீது உறுதி கொண்டு ஒரு குடை​யின்​கீழ் தமிழ் இன அடக்​கு​முறைக்கு எதி​ராக​வும், தமிழின விடு​தலையை நோக்​கி​யும் முனைப்​புடன் போராடு​வோம்’ என அறிவிக்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து அனைத்து சமூகத் தலை​வர்​கள், அரசி​யல் பிர​முகர்​கள் உட்பட ஆயிரக்​கணக்​கானோர் மலர் தூவி அஞ்​சலி செலுத்​தினர்.

இதையொட்டி இலங்​கை​யில் தமிழர்​கள் வசிக்​கும் பகு​தி​களில் உள்ள வர்த்தக நிறு​வனங்​கள் மூடப்​பட்​டிருந்​தன.

மன்​னார், யாழ்ப்​பாணம், கிளிநொச்​சி, வவுனி​யா, முல்​லைத்​தீவு, திரு​கோணமலை, மட்​டக்​களப்​பு, அம்​பாறை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *