திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்தினருடன் குடகு மலைக்கு பயணம்!!

சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது, திமுகவினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவிலும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.

அதிமுக மூத்த நிர்வாகிகளுக்குள்ளும் குழப்பநிலை இன்னும் நீடித்து வருகிறது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக, கர்நாடக மாநிலம் கூர்க் எனப்படும் குடகு மலைக்கு சென்றுள்ளார். அவருடன் மகன் உதயநிதி,மருமகன் சபரீசன் உள்பட குடும்பத்தினரும் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து தனிவிமானத்தில் மைசூரு சென்ற அவர்கள், அங்கிருந்து கார் மூலமாக குடகுமலைக்குச் சென்றுள்ளனர். ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் வருவதால், அதற்கு முன்பாக ஜூன் 2-ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *