புதிய முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் வருகிற 3-ந்தேதி பதவி ஏற்பதாக தகவல்?

டெல்லி;
கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் வருகிற 3-ந்தேதி பதவி ஏற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் டெல்லிக்கு சென்று ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது சித்தராமையா தனது மகனுக்கு மந்திரி சபையில் துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

டெல்லி சென்ற சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் பெங்களூரு திரும்பினர்.

இந்த நிலையில் விதான்சவுதா மாநாட்டு அரங்கில் இன்று மாலை 4 மணியளவில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.

இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடகாவின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக டி.கே.சிவக்குமாரை, சித்தராமையா முன்மொழிவார் அல்லது அடுத்து சட்டமன்ற கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் மேலிடத்துக்கு வழங்கும் ஒற்றை வரித்தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

பின்னர் இந்த கூட்டத்திலேயே புதிய முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பதவி ஏற்பு விழா நடைபெறும் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதலில் டி.கே.சிவக்குமாருடன் 8 முதல் 10 மந்திரிகள் மட்டுமே பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டி.கே.சிவக்குமார் மந்திரி சபையில் மந்திரி பதவி பிடிக்க காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே, பதவியேற்பு விழாவிற்கு ஜூன் 3-ந்தேதி தேர்ந்தெடுத்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறுப்படுகிறது.

இதில் முக்கியமானதாக ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட டி.கே.சிவக்குமார் தனது ஜோதிடரின் ஆலோசனை பெயரிலேயே தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *