மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்​தா​வின் லேக்டவுன் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டிருந்த, உலகப் புகழ்​பெற்ற கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸி​யின் 70 அடி உயர பிரம்​மாண்ட சிலை அகற்றம்!!

கொல்கத்தா:
மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்​தா​வின் லேக்டவுன் பகு​தி​யில் வைக்​கப்​பட்​டிருந்த, உலகப் புகழ்​பெற்ற கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸி​யின் 70 அடி உயர பிரம்​மாண்ட சிலை நேற்று அகற்​றப்​பட்​டது.

கடந்த சில நாட்​களாக வீசிய பலத்த காற்​றின்​போது, இரும்பு மற்றும் ஃபைபர் கிளாஸ் கொண்டு செய்​யப்​பட்ட இந்த மாபெரும் சிலை பலமாக ஆடி​யுள்​ளது.

இதனால், வரவிருக்​கும் பரு​வ​மழைக் காலத்​தில் பொது​மக்​களுக்கு ஆபத்து ஏற்​படலாம் என அப்​பகுதி மக்​கள் தொடர்ந்து புகார்​களை அளித்து வந்​தனர்.

இதனைத் தொடர்ந்​து, பொதுப்​பணித்​துறை அதி​காரி​கள் நேற்று அதி​காலை விஐபி சாலை பகு​தி​யில் உள்ள சுரங்​கப்​பாதை பாத​சாரி நடை​பாதை மேலே அமைக்​கப்​பட்​டிருந்த இந்த பிரம்​மாண்ட சிலையை, ஹைட்​ராலிக் கிரேன்​கள் மற்​றும் பொறி​யாளர்​கள் குழு​வின் உதவி​யுடன் பாது​காப்​பாகப் பிரித்து அகற்​றினர்.

அர்​ஜென்​டினா அணி​யின் நட்​சத்​திர ஆட்​டக்​காரர் மெஸ்​ஸி, 2022 ஃபிஃபா உலகக் கோப்​பையை ஏந்தி நிற்​பது போல இந்​தச் சிலை வடிவ​மைக்​கப்​பட்​டிருந்​தது.

கடந்த 2025 டிசம்​பரில் மெஸ்​ஸி​யின் இந்​தி​யப் பயணத்​தின்​போது இந்​தச் சிலை திறந்து வைக்​கப்​பட்​டது.

அப்​பயணத்​தின் போது மைதானத்​தில் ஏற்​பட்ட நிர்​வாகக் குறை​பாடு​கள் மற்​றும் வன்​முறைச் சம்​பவங்​கள் பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​தச் சிலை அகற்​றப்​பட்​டதன் பின்​னணி​யில் அரசி​யல் காரணங்​களும் இருப்​ப​தாகப் பார்க்​கப்​படு​கிறது.

சமீபத்​தில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்​றது.

இதன் மூலம் மம்தா பானர்​ஜி​யின் திரிணா​முல் காங்​கிரஸ் கட்​சி​யின் 15 ஆண்​டு​கால ஆட்சி முடிவுக்கு வந்​தது.

ஸ்ரீபூமி ஸ்போர்ட்​டிங் கிளப் மூலம் உரு​வாக்​கப்​பட்ட இந்த மெஸ்ஸி சிலைக்​கு, முன்​னாள் டிஎம்சி அமைச்​சர் சுஜித் போஸ் பெரும் ஆதர​வாள​ராக இருந்​தார்.

மேற்கு வங்​கத்​தில் பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல், முந்​தைய டிஎம்சி ஆட்​சிக் காலத்​தில் அமைக்​கப்​பட்ட பல்​வேறு பொது உள்​கட்​டமைப்​பு​கள், விளை​யாட்​டுச் சிற்​பங்​கள் மற்​றும் அடை​யாளச் சின்​னங்​கள் தீவிரக் கண்​காணிப்​புக்கு உள்​ளாக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன் தொடர்ச்​சி​யாக, கடந்த மே 23 அன்​றும் கொல்​கத்​தா​வில் இருந்த மற்​றொரு கால்​பந்து தொடர்​பான சிற்​பத்தை மாநில அரசு அகற்​றி​யிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *