த.வெ.க.விற்கு ஆதரவு அளித்த 21 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை – ஜே.சி.டி.பிரபாகர்…

சென்னை :

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்டது.

* அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி 4 கடிதங்களை அனுப்பியுள்ளார்.

* 4 கடிதத்தையும் முறையாக பரிசீலித்து ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டேன் பேரவை விதியை மனதில் ஏற்றுக்கொண்டேன்.

* த.வெ.க.விற்கு ஆதரவு அளித்த 21 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை.

* 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் மன்னிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தததை தொடர்ந்து தகுதி நீக்க நடவடிக்கை இல்லை.

* கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 4 பேர் மீதான நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பேன் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *