சென்னை
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது.
தி.மு.க. 59 இடங்களையும், அ.தி.மு.க. 47 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது.
இதன்படி, தேர்தலுக்கு முன்பு தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளான காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அளித்த ஆதரவின் அடிப்படையில், த.வெ.க. ஆட்சி அமைத்தது. விஜய் முதல்-அமைச்சரானார்.
அவர் தினமும் பாதுகாப்பு வாகனங்கள் சூழ தலைமை செயலகத்திற்கு வந்து செல்கிறார்.
இந்த வழியில், வழக்கம்போல் சென்னை தலைமை செயலகத்திற்கு செல்லும் வழியில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தன்னுடைய காரை நிறுத்தி, கூடியிருந்த பொதுமக்களின் அருகே சென்று அவர்களை சந்தித்து பேசி விட்டு பின்னர், புறப்பட்டு சென்றார்.
முதல்-அமைச்சர் விஜய் செல்லும்போது, சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஒரே சாலையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு வழியில் பொதுமக்களும், மற்றொரு வழியில் முதல்-அமைச்சரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்களும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.